அரசு ஊழியர்கள் பதவி உயர்வை உரிமையாக கேட்க முடியாது - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி கருத்து

0 2165
அரசு ஊழியர்கள் பதவி உயர்வை ஒரு உரிமையாக கேட்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.

அரசு ஊழியர்கள் பதவி உயர்வை ஒரு உரிமையாக கேட்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.

மதுரை வளர்நகரைச் சேர்ந்த மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், தாக்கல் செய்த மனுவில், தனக்கு ஐஏஎஸ் பதவி உயர்வு கிடைக்க, மத்திய அரசின் ஆய்வுக்குழு கூட்டம் நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.

அந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், அரசு ஊழியர்கள் பதவி உயர்வை ஒரு உரிமையாக கேட்க முடியாது என்றும், பதவி உயர்வுக்கான தகுதியான நபர்களை நிர்வாகம் தான் தேர்வு செய்யும் என்றும் தெரிவித்தார்.

பணியிடங்களை நிரப்புவது, பதவி உயர்வு வழங்குவது என்பது நிர்வாக ரீதியான முடிவாகும் என கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments