"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
தீயில் இருந்து தப்பித்து பேருந்தில் சிக்கிய மான்..
உசிலம்பட்டி அருகே, மலைப்பகுதியில் ஏற்படுத்தப்பட்ட தீயில் இருந்து தப்பித்து வந்த புள்ளி மான், பேருந்து மோதி தூக்கி வீசப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.
நேற்று, புத்தூர் மலையில் உள்ள வனப்பகுதிக்கு மர்ம நபர்கள் சிலர் தீ வைத்தனர். தீயில் இருந்து தற்காத்துக்கொள்ள மலை அடிவாரத்துக்கு வந்த புள்ளிமானை நாய் ஒன்று துரத்தியுள்ளது. சாலையை கடந்து தலைதெறிக்க ஓடிய புள்ளி மானை அவ்வழியாக வந்த பேருந்து மோதியதால், தூக்கி வீசப்பட்டு, துடிதுடித்து உயிரிழந்தது.
நேற்று உலக வன தினம் அனுசரிக்கப்பட்ட நிலையில் மலைப்பகுதிக்கு தீ வைத்த மர்ம நபர்கள் குறித்தும் , விபத்தை ஏற்படுத்திய பேருந்து குறித்தும் 5 பேர் கொண்ட குழு அமைத்து வனைத்துறை விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
Comments