அனைத்து பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணம் உறுதி செய்யப்படுமாசெல்லூர் ராஜு கேள்வி
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய எம்.எல்.ஏ. செல்லூர் ராஜு, குறிப்பிட்ட பேருந்துகளில் மட்டும் பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டி, அனைத்து பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணம் உறுதி செய்யப்படுமா என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜகண்ணப்பன், அனைத்து பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசம் என அறிவித்தால், போக்குவரத்து கழகத்தை எவ்வாறு நடத்துவது என வினவியதோடு, போக்குவரத்துத்துறை ஏற்கனவே 48ஆயிரம் கோடி நஷ்டத்தில் இயங்கி வருவதாக கூறினார்.
Comments