ஆழியார் அணையின் கரையோரத்தில் முதலை தென்பட்டதால் சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை

0 1566
ஆழியார் அணையின் கரையோரத்தில் முதலை தென்பட்டதால் சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள ஆழியார் அணையின் கரையோரத்தில் முதலை தென்பட்டதால், கரையோரப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

120 அடி கொள்ளளவு கொண்ட ஆழியார் அணை பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களின் குடிநீர் மற்றும் பாசனத்திற்கு நீர் ஆதாரமாக உள்ளது. கோடைக்காலம் தொடங்கியதால் அணையின் நீர்மட்டம் குறைந்துள்ள நிலையில், அணையின் பின்புறத்தில் பழைய வால்பாறை சாலை அருகே கரையோரத்தில் இரண்டு முதலைகள் தென்பட்டுள்ளது.

இது தொடர்பான வீடியோக்கள் வைரலான நிலையில், கரையோர பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என பொதுமக்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments