நிதி பற்றாக்குறையை படிப்படியாக குறைக்க திட்டம் - நிதியமைச்சர்
நடப்பாண்டில் நிதி பற்றாக்குறையை படிப்படியாக குறைக்க திட்டமிட்டுள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சட்டப்பேரவையில் பேசிய அவர், சரியான நிதி திட்டமிடுதலால் கடந்த காலத்தைவிட தற்போது நிதிப்பற்றாக்குறை சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் வரை குறைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா 2ஆம் அலையின் போது பல கட்டுப்பாடுகள் இருந்ததாகவும், திமுக ஆட்சிக்கு வந்த பின் பல தளர்வுகள் அளிக்கப்பட்டதால், வருவாய் வந்ததாகவும் தெரிவித்தார்.
Comments