அண்டை மாநிலங்களில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரிப்பு - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

0 2867

அண்டை மாநிலங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் அடுத்த மூன்று மாதத்திற்கு தமிழக மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அறிவுறுத்தியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் தொற்று பாதிப்பு குறைந்துவிட்டது என அலட்சியம் காட்டாமல், அடுத்த மூன்று மாதத்திற்கு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.

51 லட்சம் பேர் இன்னும் முதல் தவணை தடுப்பூசியே போட்டுக் கொள்ளாமல் இருப்பதாக கூறிய அமைச்சர் அவர்கள் உடனடியாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments