வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக உருமாறாது - வானிலை ஆய்வு மையம்
வடக்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக உருமாறாது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்த செய்திக்குறிப்பில், வடக்கு அந்தமான் கடல், அதனை ஒட்டிய மத்திய கிழக்கு மற்றும் தென் கிழக்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக உருமாறும் என கணிக்கப்பட்ட நிலையில், தற்போது புயலாக உருமாறுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைந்து விட்டதாகவும், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே கரையைக் கடக்கக் கூடும் என தெரிவித்துள்ளது.
தற்போது மணிக்கு 16 கிலோ மீட்டர் வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், அந்தமான் தீவு பகுதியில் இருந்து விலகி மியான்மர் கடற்கரைப் பகுதியில் இன்று கரையைக் கடக்கக் கூடும் என தெரிவித்துள்ளது.
Comments