பொது பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நடைபெறும் - யுஜிசி
மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளில் சேர பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழ் உட்பட 13 மொழிகளில் நுழைவு தேர்வு நடத்தப்படும் என யு.ஜி.சி. தெரிவித்துள்ளது.
வரும் கல்வியாண்டு முதல் அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் இளநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், நுழைவுத் தேர்வுகள் தமிழ் உட்பட 13 மொழிகளில் நடத்தப்படும் என பல்கலைக்கழக மானியக் குழு கூறியுள்ளது. தமிழ், ஹிந்தி, மராத்தி, குஜராத்தி, தெலுங்கு, கன்னடா, மலையாளம் உள்ளிட்ட 12 மாநில மொழிகளிலும், ஆங்கிலத்திலும் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என தெரிவித்துள்ளது.
நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் முதல் தேதியில் இருந்து ஆன்லைனில் கிடைக்கும் எனவும் யு.ஜி.சி. கூறியுள்ளது.
Comments