உக்ரைனில் 3.3 லட்சம் பேருக்கு அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம்.!
உக்ரைன் எல்லையில் பாதுகாப்பு முகாம்கள் அமைத்து குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டோரை தங்க வைத்துள்ளதாகவும், 3 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு ரொட்டி, கோதுமை மாவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கியுள்ளதாகவும் ஐ.நா. தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐ.நா. பொதுச் செயலாளரின் செய்தி தொடர்பாளர் ஸ்டாபானே டுஜாரிக், குழந்தைகள் நிதியம் மற்றும் அகதிகளுக்கான முகமை என ஐ.நா.வின் இரு அமைப்புகள் ஒன்றிணைந்து உக்ரைனை விட்டு வெளியேறிய பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு புகலிடம் அளித்துள்ளதாக கூறினார்.
ஐ.நா. உணவு கழகம் மூலம் உக்ரைனில் சிக்கியுள்ள மக்களுக்கு 104 மெட்ரிக் டன் ரொட்டி, பிஸ்கட், 478 மெட்ரின் டன் கோதுமை மாவு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுள்ளதாக தெரிவித்தார்.
Comments