சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் ரூ.50 உயர்வு
வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் 50 ரூபாய் விலை உயர்ந்து 965 ரூபாய் 50 காசுகளுக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சமையல் எரிவாயு விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. கச்சா எண்ணெய் விலையேற்றம் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்த நிலையில் தற்போது சமையல் எரிவாயுவின் விலையும் உயந்துள்ளது.
சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் 915 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது 50 ரூபாய் விலை உயர்த்தப்பட்டு 965 ரூபாய் 50 காசுகளுக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Comments