கடலூர் அருகே 10 அடி ஆழ பள்ளத்தில் கார் தலைகீழாக கவிழ்ந்து விபத்து.. அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய தம்பதி.!

0 2300

கடலூர் அருகே 10 அடி ஆழ பள்ளத்தில் கார் தலைகீழாக கவிழ்ந்த விபத்தில் தம்பதி உயிர்தப்பினர்.

கோண்டூர் பகுதியில் சாலை விரிவாக்கப் பணியின் ஒரு பகுதியாக பாலம் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டிருந்தது. இந்நிலையில், அந்த வழியாக வந்த கார் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்தது.

போதிய வெளிச்சமின்மை மற்றும் சாலைத்தடுப்பு இல்லாததே விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இதனால், கடலூர் - பண்ருட்டி இடையே சாலைப் பணிகள் நடைபெறும் இடங்களில் தடுப்புகள் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments