மெர்சிடஸ் பென்ஸ் கார் ஆலைக்குள் புகுந்த குட்டி சிறுத்தை புலியால் பரபரப்பு

0 1871

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள மெர்சிடஸ் பென்ஸ் கார் தொழிற்சாலைக்குள் புகுந்த குட்டி சிறுத்தை புலியால் பரபரப்பு ஏற்பட்டது.

 Mercedes-Benz ஆலை வளாகத்திற்குள் சிறுத்தை புலி சுற்றித்திரிவதை பார்த்த காவலாளி ஒருவர் போலீசாருக்கு தகவல் அளித்தார். இதையடுத்து, ஆலை ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டு, அங்கு பணிகள் நிறுத்தப்பட்டது.

விரைந்து வந்த போலீசார் மற்றும் வனத்துறையினர் சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மயக்க மருந்து செலுத்தி 3 வயது ஆண் சிறுத்தை புலியை பிடித்தனர்.

பிடிப்பட்ட சிறுத்தை புலி மருத்துவ சோதனைக்கு பிறகு வனப்பகுதியில் விடப்படும் என அதிகாரி ஒருவர் கூறினார். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments