லண்டன் டூ இந்தியா… 100 நாட்கள், 30 ஆயிரம் கிலோ மீட்டர் தூர பைக் பேரணி…. மண் வள பாதுகாப்பு குறித்த சத்குருவின் விழிப்புணர்வு பயணம்!

0 3045

உலக அளவில் மண் வள பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த 30 ஆயிரம் கிலோ மீட்டர் தூர பைக் பேரணியில் ஈடுபட்டுள்ள யோகா குரு சத்குரு, லண்டன் நாடாளுமன்ற சதுக்கத்தில் இருந்து தன் பயணத்தை தொடங்கினார்.

100 நாட்கள் பயணமாக ஐரோப்பிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளான நெதர்லாந்து, ஜெர்மனி, செக் குடியரசு உள்ளிட்ட 27 நாடுகள் வழியாக, 3 கண்டங்களை கடந்து இந்தியா வர சத்குரு திட்டமிட்டுள்ளார்.

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை குறிக்கும் விதமாக பயணத்தின் 75-வது நாளில் டெல்லி வர சத்குரு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லண்டன் நாடாளுமன்ற சதுக்கத்தில் நடந்த விழாவில் சிறுமி கொடியசைத்து துவக்கி வைத்ததை அடுத்து, BMW K1600 GT வகை சூப்பர் பைக்கில் தனது விழிப்புணர்வு பேரணியை ஜக்கி வாசுதேவ் தொடங்கினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments