பத்ம விருது விழாவில், தரையில் விழுந்து வணங்கிய சாமி சிவனாந்தாவுக்கு பதில் வணக்கம் தெரிவித்த பிரதமர்

0 3031

2022ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

மொத்தம் 128 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், டெல்லி ராஷ்டிரபதி பவனில் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மறைந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்துக்கு அறிவிக்கப்பட்டிருந்த பத்ம விபூஷன் விருதை அவரது மகள்கள் குடியரசுத் தலைவரிடம் இருந்து பெற்றுக் கொண்டனர்.

மேலும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், சீரம் நிறுவனத்தின் சைரஸ் பூனவாலா உள்ளிட்டோருக்கும் பத்மபூஷன் விருதுகள் வழங்கப்பட்டன.

இதனிடையே, பத்மஸ்ரீ விருதினை பெற வந்த சாமி சிவனாந்தா தரையில் விழுந்து வணங்கியதை அடுத்து, பிரதமர் மோடி அவருக்கு பதில் வணக்கம் செலுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments