உத்தரகாண்ட், கோவாவில் கடந்த முறை முதலமைச்சர்களாக பதவி வகித்தவர்களே, இம்முறையும் முதலமைச்சராக தேர்வு

0 1865

த்தரகாண்ட், கோவா ஆகிய மாநிலங்களில் கடந்த முறை முதலமைச்சர்களாக பதவி வகித்தவர்களே தொடர்ந்து அப்பதவியில் நீடிக்க உள்ளனர். அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் இரு மாநிலங்களிலும் பாஜகவே வெற்றிப்பெற்றது.

இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்ற பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், புஷ்கர் சிங் தாமி முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். தேர்தலில் அவர் தோல்வியுற்ற நிலையில், அவரே முதலமைச்சராக தொடர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், கோவாவில் பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்ற நிலையில், பிரமோத் சாவந்த் ஒருமனதாக முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டதாக அக்கட்சியின் மேலிட பார்வையாளர்கள் அறிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments