ஊபரில் கால் டாக்ஸி ஓட்டும் ஆப்கான் முன்னாள் நிதி அமைச்சர் : அப்போது பட்ஜெட் தாக்கல்... இப்போது குடும்ப சூழ்நிலையால் டாக்ஸி டிரைவர்
ஆப்கானிஸ்தானில் தலிபன்கள் ஆட்சி பொறுப்பை ஏற்பதற்கு முன் அந்நாட்டின் நிதி அமைச்சராக இருந்த காலித் பயெண்டா தற்போது அமெரிக்காவில் ஊபர் கால் டாக்ஸி ஓட்டி வருகிறார்.
கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் தலிபன்கள் ஆட்சியை கைபற்றுவதற்கு ஒரு வாரம் முன்பாக தன் பதவியை ராஜினாமா செய்த அவர், அமெரிக்காவின் வாஷிங்டனில் வாழ்ந்து வரும் தன் குடும்பத்தாருடன் சென்று சேர்ந்தார்.
4 குழந்தைகளுக்கு தந்தையான காலித் பயெண்டா, குடும்ப சூழ்நிலை காரணமாக கால் டாக்ஸி ஓட்டி வருவதாக தெரிவித்துள்ளார். ஒரு காலத்தில் ஆப்கானிஸ்தானின் பட்ஜெட்டை தாக்கல் செய்த அவர், தற்போது 6 மணி நேர டாக்ஸி ஓட்டும் வேலைக்கு சுமார் 150 டாலர் பெற்று வருகிறார்.
Comments