இந்தியா, ஆஸ்திரேலியா இடையான முதலீட்டை அதிகரிக்க இருநாட்டுப் பிரதமர்களும் ஒப்புதல்
இந்தியா, ஆஸ்திரேலியா இடையான முதலீட்டை அதிகரிக்க இருநாட்டுப் பிரதமர்களும் ஒப்புக் கொண்டுள்ளதாக வெளியுறவுச் செயலர் ஹர்சவர்த்தன் சிரிங்லா தெரிவித்துள்ளார்.
இந்திய - ஆஸ்திரேலிய மாநாட்டில் காணொலியில் இருநாட்டுப் பிரதமர்களும் பேச்சு நடத்தியது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தூர்தர்சன் நிகழ்ச்சிகளை ஆஸ்திரேலியாவில் ஒளிபரப்ப அந்நாட்டு ஒலிபரப்புச் சேவையுடன் பிரசார் பாரதி புரிந்துணர்வு உடன்பாடு செய்துள்ளதாகத் தெரிவித்தார்.
இந்தியாவின் உட்கட்டமைப்புத் திட்டங்களில் ஆஸ்திரேலியாவின் முதலீட்டை ஈர்க்க அந்நாட்டில் உள்ளதைப்போல் வரிச்சலுகை அளிக்க இந்தியா முன்வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவில் ஆஸ்திரேலியாவின் முதலீடு ஒரு இலட்சத்து 14 ஆயிரம் கோடி ரூபாயாகவும், ஆஸ்திரேலியாவில் இந்தியாவின் முதலீடு 91 ஆயிரம் கோடி ரூபாயாகவும் உள்ளதாக ஹர்சவர்த்தன் சிரிங்லா தெரிவித்தார்.
Comments