காதலிக்க மறுத்த பள்ளி மாணவியின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பிச் சென்ற இளைஞனுக்கு போலீசார் வலைவீச்சு

0 2712
காதலிக்க மறுத்த பள்ளி மாணவியின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பிச் சென்ற இளைஞனுக்கு போலீசார் வலைவீச்சு

ஆந்திர மாநிலம் நெல்லூரில் தன்னை காதலிக்க மறுத்த பள்ளி மாணவியின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பி ஓடியவனை போலீசார் தேடி வருகின்றனர்.

நெல்லூர் மாவட்டம் வெங்கடகிரியைச் சேர்ந்த அந்த மாணவியை அதே பகுதியைச் சேர்ந்த செஞ்சு கிருஷ்ணா என்பவன் ஒரு தலையாக காதலித்து வந்ததாகவும், அவனது காதலை அந்த மாணவி ஏற்க மறுத்ததாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், அந்த மாணவி பள்ளிக்கு சென்றுக்கொண்டிருக்கும் போது வழிமறித்து, கத்தியால் குத்தியும் கழுத்தை அறுத்தும் கொலை செய்ய முயற்சி செய்து அவன் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

படுகாயம் அடைந்த அந்த மாணவியை மீட்ட பொதுமக்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments