16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தலைமறைவாக இருந்தவன் கைது

0 2381
16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தலைமறைவாக இருந்தவன் கைது

கேரளாவில் கடந்த ஆண்டு 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தமிழகம் தப்பி வந்து தலைமறைவாக இருந்த ஒருவனை கேரள போலீசார் சேலத்தில் வைத்து சுற்றி வளைத்து கைது செய்தனர்.

சேலம் பண்ணப்பட்டி அருகேயுள்ள மாட்டுக்காரன்புதூர் பகுதியை சேர்ந்த கட்டட தொழிலாளியான கதிர்வேல் என்பவன், சென்ற ஆண்டு கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள செம்பகச்சேரியில் கட்டட வேலையில் இருந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக சொல்லப்படுகிறது.

தன் மீது போக்ஸோ வழக்கு பதியப்பட்டதை அறிந்த அவன் அங்கிருந்து தப்பி வந்து சொந்த ஊரில் தலைமறைவாக இருந்து வந்துள்ளான். இந்நிலையில், அவனது செல்போன் எண் மூலம அவன் இருக்கும் இடத்தை கேரள போலீசார் கண்டறிந்தனர்.

தமிழக போலீசாரின் உதவியுடன் அவனை ரகசியமாக பின் தொடர்ந்த கேரள போலீசார் ஓமலூர் அரசு மருத்துவமனையில் உறவினர் ஒருவரை பார்பதற்காக வந்த அவனை சுற்றி வளைத்து கைது செய்து கேரளா அழைத்துச் சென்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments