பஞ்சாபில் மாநிலங்களவைத் தேர்தலுக்கு கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் உட்பட 5 பேர் வேட்பாளர்களாக அறிவிப்பு

0 6283
பஞ்சாபில் மாநிலங்களவைத் தேர்தலுக்கு கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் உட்பட 5 பேர் வேட்பாளர்களாக அறிவிப்பு

பஞ்சாபில் மாநிலங்களவைத் தேர்தலுக்கு கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் உட்பட 5 பேரை வேட்பாளர்களாக ஆம் ஆத்மிக் கட்சி அறிவித்துள்ளது.

பஞ்சாபில் இருந்து மாநிலங்களவைக்கு 5 பேரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் மார்ச் 31ஆம் நாள் நடைபெற உள்ளது. அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 117 தொகுதிகளில் 92 இடங்களை ஆம் ஆத்மிக் கட்சி கைப்பற்றியது. இதனால் மாநிலங்களவையில் 5 இடங்களுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், டெல்லி சட்டமன்ற உறுப்பினர் ராகவ் சதா, டெல்லி ஐஐடி பேராசிரியர் சந்தீப் பதக், லவ்லி பல்கலைக்கழகத்தின் வேந்தர் அசோக் மிட்டல், மார்பகப் புற்றுநோய் சிகிச்சை மைய அறக்கட்டளை நிறுவனரான சஞ்சீவ் அரோரா ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments