தங்கள் நாட்டுக்குள் நுழைந்த ரஷ்ய ராணுவ வாகனங்களை உக்ரைனிய திருப்பி அனுப்பிய பொதுமக்கள்.!
தங்கள் நாட்டுக்குள் நுழைந்த ரஷ்ய ராணுவ வாகனங்களை உக்ரைனிய பொதுமக்கள் திருப்பி அனுப்பினர்.
கெர்சான் நகருக்குள் ஆயுதங்கள் மற்றும் உணவுப் பொருட்களை எடுத்துக் கொண்டு ரஷ்யாவின் இரு ராணுவ கவச வாகனங்கள் சென்றன. இதனைக் கண்ட உக்ரேனிய பொதுமக்கள் தங்கள் நாட்டு தேசியக் கொடியை கையில் ஏந்திய வண்ணம், ரஷ்ய வாகனங்களை திரும்பிச் செல்லுமாறு முழக்கமிட்டனர்.
பொதுமக்களின் கடும் எதிர்ப்பு மற்றும் உறுதியான மனோதிடத்தைக் கண்ட ரஷ்ய ராணுவ வாகனங்கள் திரும்பிச் சென்றன. இதனைக் கண்ட உக்ரேனிய மக்கள் கைகளைத் தட்டியும், சீழ்க்கை ஒலி எழுப்பியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
Comments