மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித் தீர்மானம்.!

0 1932

மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டப்பேரவையில் இன்று தனித்தீர்மானம் கொண்டுவரப்படுகிறது. நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தீர்மானத்தை முன்மொழிந்து பேசுகிறார். 

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. தமிழகத்தின் கடுமையான எதிர்ப்பால், மேகதாது அணை கட்டும் திட்டத்தை தள்ளிப்போட்டு வந்த கர்நாடகா அரசு, சமீபத்தில் அணை கட்ட நிதியும் ஒதுக்கீடு செய்தது.

அத்தோடு, மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்குமாறு தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில், மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து, தமிழக சட்டப்பேரவையில் இன்று தனித்தீர்மானம் கொண்டுவரப்படவுள்ளது.

காவிரி நடுவர் நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மீறியும், சம்பந்தப்பட்ட மாநிலங்களின் அனுமதியை பெறாமலும் தன்னிச்சையாக மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா நிதி ஒதுக்கியதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என தமிழக அரசு கூறியுள்ளது.

கர்நாடகாவின் அணை கட்டும் திட்டத்திற்கு தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் உட்பட எந்த வித அனுமதியும் அளிக்கக் கூடாது என மத்திய அரசை வலியுறுத்தும் வகையில் தனித்தீர்மானம் கொண்டுவரப்படுகிறது.

மேலும், மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகா அரசின் விரிவான திட்ட அறிக்கையை பரிசீலிக்கவோ, அனுமதி அளிக்கவோ கூடாது என காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை வலியுறுத்தும் வகையிலும் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்படவுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments