தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் சட்டப்பேரவையில் இன்று தொடக்கம்.!
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் சட்டப்பேரவையில் இன்று தொடங்குகிறது.
கடந்த 18ந்தேதி அரசின் நிதி நிலை அறிக்கையும், 19ந்தேதி வேளாண் நிதிநிலை அறிக்கையும் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த நிலையில் நிதி நிலை அறிக்கை மீதான விவாதம் பேரவையில் இன்று துவங்குகிறது.
நிதிநிலை தொடர்பாக பல்வேறு கேள்விகளை, சந்தேகங்களை உறுப்பினர்கள் எழுப்ப உள்ளனர். இந்த கூட்டதொடர் வருகிற 24ந்தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் கேள்வி,பதில் நிகழ்ச்சி கிடையாது. மற்ற நாட்களில் கேள்வி,பதில் நிகழ்ச்சி உண்டு என்றும் அவை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments