குற்றாலத்தில் இளைஞர்கள், மாணவர்களிடையே பரவி வரும் வீலிங் விளையாட்டுக்களை காவல்துறையினர் கட்டுப்படுத்த வேண்டுமென கோரிக்கை.!

0 2791

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் இடையே வேகமாக பரவி வரும் இரு சக்கர சாகசங்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

செங்கோட்டை, கடையநல்லூர், தென்காசி, ஆகிய பகுதிகளில் நடைபெற்று வந்த இந்த வீலிங் விளையாட்டுக்கள் தற்போது பூலங்குடியிருப்பு மற்றும் குற்றாலம் பகுதிகளில் பரவி வருகிறது.

உயிரை பணயம் வைத்து இருசக்கர வாகனங்களில் செல்லும் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் சாகசங்களில் ஈடுபடும் எண்ணிக்கை தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது .

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments