ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் அலுமினியம் மற்றும் பாக்ஸைட்டை தடை செய்வதாக ஆஸ்திரேலியா அறிவிப்பு.!

0 2288

ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் அலுமினியம் மற்றும் பாக்ஸைட்டை தடை செய்வதாக ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஆஸ்திரேலிய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ரஷ்யா தனது அலுமினா தேவைகளில் கிட்டத்தட்ட 20 சதவீதத்திற்கு ஆஸ்திரேலியாவை நம்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆஸ்திரேலியா கூறியுள்ளது.

ரஷ்ய அலுமினிய நிறுவனமான ருசல் மற்றும் சுரங்க நிறுவனமான ரியோ டின்டோ ஆகியோருக்கும் குயின்ஸ்லாந்து அலுமினிய நிறுவனத்திற்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்ட சில நாட்களில் இந்தத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments