வங்காளதேசத்தில் பயணிகள் படகு மீது சரக்கு கப்பல் மோதி விபத்து - 6 பேர் சடலமாக மீட்பு

0 2685

வங்காளதேசத்தில் பயணிகள் படகு மீது சரக்கு கப்பல் மோதிய விபத்தில் நீரில் மூழ்கிய 6 பேரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

காணாமல் போன 20-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி முழு வீச்சில் நடைபெறுவதாக மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

டாக்கா புறநகரில் பாயும் சிட்டலக்சயா நதியில் ஏறத்தாழ 50 பேருடன் சென்ற பயணிகள் படகு மீது சரக்கு கப்பல் மோதியது. சம்பவத்தில் படகில் பயணித்தவர்கள் தண்ணீர் விழுந்து தத்தளித்தனர்.

அருகில் இருந்தவைகளை பிடித்து சிலர் உயிர் தப்பிய நிலையில் நீரில் மூழ்கி காணாமல் போனவர்களை தேடும் பணியில் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். 6 பேரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும், காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்வதால் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments