கோவில் திருவிழாவில் பங்கேற்ற யானை, திடீரென மிரண்டு தலைதெறிக்க ஓட்டம்
கேரள மாநிலம் பாலக்காடு அருகே, கோவில் திருவிழாவில் பங்கேற்றிருந்த யானை, மேலே பாகன்கள் அமர்ந்திருந்த போதே திடீரென மிரண்டு ஓடிய வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன.
மங்கரா பகுதியில் உள்ள கோவில் திருவிழாவுக்காக ராமன் என்ற யானை அழைத்துவரப்பட்டது. விழாவின் இறுதி நிகழ்வாக ஊர்வலத்திற்கு தயாராக இருந்த அந்த யானை மீது பாகன், ஒரு சிறுவன் உட்பட 4 பேர் அமர்ந்திருந்தனர்.
அப்போது யானை மிரண்டு ஓடியது. செல்போனில் எடுக்கப்பட்ட இந்தக் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Comments