நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகளை விட, கூடுதல் வாக்குகள் உள்ளது - ஐசரி கணேஷ் குற்றச்சாட்டு

0 5681

டிகர் சங்க தேர்தலின் போது பதிவான வாக்குகளை விட, வாக்கு எண்ணிக்கையில் கூடுதலான வாக்குகள் இருப்பதாக பாக்யராஜ், ஐசரி கணேஷ் உள்ளிட்டோர் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணி குற்றம்சாட்டியுள்ளது.

2019ஆம் ஆண்டு நடைபெற்ற நடிகர் சங்கத் தேர்தலில் பதிவான வாக்குகள் இரண்டு ஆண்டுகள் கழித்து எண்ணப்பட்ட நிலையில், தேர்தலின் போது பதிவான வாக்குகளை விட, வாக்கு எண்ணிக்கையில் கூடுதல் வாக்குகள் இருப்பதாக சுவாமி சங்கரதாஸ் அணி சார்பில் துணை தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஐசரி கணேஷ் புகார் கூறியுள்ளார்.

மேலும், வாக்கு எண்ணிக்கையில் திருப்தி இல்லை எனக் கூறி சுவாமி சங்கரதாஸ் அணி வாக்கு எண்ணிக்கை மையத்தைவிட்டு வெளியேறியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments