சர்க்கரை உற்பத்தியைக் குறைத்து, எத்தனால் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் - அமைச்சர் நிதின் கட்கரி
சர்க்கரை உற்பத்தியைக் குறைத்துக் கொண்டு எத்தனால் உற்பத்தியை அதிகரிப்பது சர்க்கரைத் தொழிலை நல்ல நிலையில் வைத்திருக்க உதவும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
மும்பையில் சர்க்கரைத் தொழில் பற்றிய மாநாட்டில் பேசிய அவர், எரியாற்றல் துறையை நோக்கி வேளாண்மையைப் பன்முகப்படுத்துவது காலத்தின் தேவையாகும் எனத் தெரிவித்தார்.
விவசாயிகள் உணவு வழங்குவது மட்டுமின்றி எரியாற்றல் வழங்குவோராகவும் மாற வேண்டிய தேவையுள்ளதாகத் தெரிவித்தார். எத்தனால், மெத்தனால், பயோடீசல், ஹைட்ரஜன், மின்சாரம் ஆகியவற்றில்தான் எதிர்காலம் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
நம் நாட்டில் அரிசி, சோளம், சர்க்கரை ஆகியன தேவைக்கு அதிகமாக உள்ளதாகவும், இவற்றை எத்தனால் உற்பத்திக்குப் பயன்படுத்த வேண்டும் என்றும் கட்காரி வலியுறுத்தினார்.
Comments