கோவிஷீல்டு 2வது டோஸ் தடுப்பூசிக்கான கால இடைவெளி குறைகிறது - தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு
கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியின் 2அவது டோஸ் செலுத்திக் கொள்வதற்கான கால இடைவெளி குறைக்கப்பட உள்ளது.
சீரம் நிறுவன தயாரிப்பான கோவிஷீல்டின் 2 டோஸ்களுக்கான கால இடைவெளி 12 முதல் 16 வாரங்களாக உள்ளன. இந்நிலையில், அந்த இடைவெளியை 8 முதல் 16 வாரங்களாக குறைக்க மத்திய அரசுக்கு, நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு பரிந்துரைத்துள்ளது.
12 வார கால இடைவெளியில் கோவிஷீல்டு செலுத்தப்படும் போதும், 8 வாரங்களில் செலுத்தப்படும் போதும் உருவாகும் நோய் எதிர்ப்பு தன்மையில் பெரியளவில் மாற்றம் இல்லை என்பதால், அரசுக்கு தகவல் தெரிவித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்த கால இடைவெளி மாற்றம் விரைவில் அமலுக்கு வரும் என தகவல் வெளியாகி உள்ளது.
Comments