கொரோனா தொடர்பான தவறான தகவல்கள், கொரோனா பரவலுக்கு வழிவகுக்கும் - WHO எச்சரிக்கை

0 2140

கொரோனா தொடர்பாக பரவி வரும் தவறான தகவல்கள் உலக முழுவதும் தொற்று பரவல் அதிகரிப்பதற்கான காரணமாக அமைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

கொரோனா பெருந்தொற்று முடிந்துவிட்டது, இது தான் கொரோனாவின் கடைசி உருமாறிய திரிபு உள்ளிட்ட தவறான தகவல்கள் பரவுவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், இது போன்ற தகவல்கள் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி, தொற்று பரவ வழிவகுப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

சீனா, தென் கொரியா, பிரிட்டன், ஹாங்காங் போன்ற நாடுகளில் கொரோனா பரவல் கணிசமாக உயர்ந்த நிலையில், கடந்த வாரத்தில் உலகளவில் ஒரு கோடியே 10 லட்சம் பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments