நரசிங்கம்பேட்டை நாதஸ்வரத்திற்கு புவிசார் குறியீடு

0 2969

தஞ்சாவூர் மாவட்டம் நரசிங்கம்பேட்டை நாதஸ்வரத்திற்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

1955 ஆம் ஆண்டில் நரசிங்கம்புரத்தைச் சேர்ந்த என்.ஜி.என். ரங்கநாத ஆசாரி என்ற கைவினை கலைஞர் சுத்த மத்தியமம் ஸ்வரத்தை கண்டுபிடித்து, அதை நாதஸ்வர கருவியில் உருவாக்கினார்.

இவ்வாறு, உருவாக்கப்பட்ட நாதஸ்வர கருவிதான் நரசிங்கம்பேட்டை நாதஸ்வரம் என்று உருவானது. திராவிடர்களின் இசைக்கருவி என்றழைக்கப்படும் நரசிங்கம்பேட்டை நாதஸ்வரம், மரங்களில் வலிமையான ஆச்சா மரத்தை பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. ஆச்சா மரத்தை இரண்டரை அடி நீளத்தில் வெட்டி அதனை கடைந்து, 12 துளைகள் இட்டு உருவாக்கப்படுகிறது.

பல்வேறு சிறப்புகள் கொண்ட நரசிங்கம்பேட்டை நாதஸ்வரத்துக்கு தற்போது புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் நரசிங்கம்பேட்டை நாதஸ்வரத்தை சேர்த்து 10 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments