மணிப்பூர் முதலமைச்சராக பிரேன் சிங் தேர்வு : பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஒருமனதாக தேர்வு

0 4712

ணிப்பூர் மாநிலத்தின் முதலமைச்சராக பிரேன் சிங் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 32 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் பாஜக வெற்றிப்பெற்றது. இந்நிலையில், மணிப்பூர் தலைநகர் இம்பாலில் பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.

அதில் பிரேன் சிங் முதலமைச்சராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாக அம்மாநில பாஜக சிறப்பு பார்வையாளரான மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

இதனை தொடர்ந்து, ஆளுநர் இல.கணேசனை சந்தித்து பிரேன் சிங் ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments