ரஷ்ய வான் தாக்குதலால், பாதாள அறையில் சிறுவர்களுக்கு ஓவிய வகுப்புகள் : போர் சூழலை மறக்க வைத்து புத்துணர்ச்சி ஊட்டும் சீன மாணவி
வெடிச்சத்தத்துக்கு மத்தியில் அச்சத்துடன் வாழ்ந்து வரும் உக்ரைன் நாட்டு சிறுவர்களுக்கு, போர் சூழலை மறக்க வைத்து புத்துணர்ச்சி ஊட்டும் விதமாக சீனப் பெண் ஒருவர் ஓவிய வகுப்புகளை நடத்தி வருகிறார்.
கியி என்ற அந்த மாணவி, ஓவியக்கலையில் முனைவர் பட்டம் பெறுவதற்காக 3 ஆண்டுகளாக உக்ரைனில் வசித்து வருகிறார்.
போர் சூழலிலும் சீனாவிற்கு செல்ல மறுத்த கி யி தான் தங்கியிருந்த வீட்டின் பாதாள அறையில் சிறுவர் சிறுமியருக்கு ஓவியப் பயிற்சி அளித்து வருகிறார்.
ஓயாத வெடிச்சத்தம் மற்றும் சைரன் ஓசைக்கு மத்தியில் சிறுவர்களின் சிரிப்பொலியால் அந்த பாதாள அறை களை கட்டி காணப்படுகிறது.
Comments