நம்ம ஊரு திருவிழா - முதலமைச்சர் வரவேற்பு
தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் சென்னைத் தீவுத்திடலில் மார்ச் 21 அன்று மாலை நடைபெறும் நம்ம ஊரு திருவிழாவுக்கு அனைவரையும் வரவேற்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னைத் தீவுத்திடலில் திங்கள் மாலை 6 மணி முதல் அருந்தமிழ்க் கலைகளின் விழா நடைபெற உள்ளது. இதைக் கண்டுகளிக்க அனைவருக்கும் அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், மண்ணின் கலையும்; மக்களின் இசையுமாகக் கலை பண்பாட்டுத் துறை ஒருங்கிணைக்கும் நம்ம ஊரு திருவிழா சென்னைத் தீவுத்திடலில் நடைபெறுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மண்ணின் பண்பாட்டையும் தனித்தன்மையையும் நானூற்றுக்கு மேற்பட்ட கலைஞர்கள் பறைசாற்ற உள்ளதாகவும், இந்தத் திருவிழாவுக்கு அனைவரையும் வரவேற்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மண்ணின் கலையும்; மக்களின் இசையுமாக @DAC_TN ஒருங்கிணைக்கும் #நம்ம_ஊரு_திருவிழா சென்னை தீவுத்திடலில் நடைபெறுகிறது.
— M.K.Stalin (@mkstalin) March 19, 2022
தமிழ் மண்ணின் பண்பாட்டையும் தனித்தன்மையையும் 400-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பறைசாற்றுகிறார்கள்.
அரசின் முகமாக நான் உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். pic.twitter.com/nBSKSCyWcZ
Comments