கோதுமை இறக்குமதிக்கு இந்தியாவுடன் எகிப்து பேச்சு
இந்தியாவில் இருந்து கோதுமை இறக்குமதி செய்வது குறித்து இறுதிக்கட்டப் பேச்சு நடைபெற்று வருவதாக எகிப்து நாட்டின் வணிகம் மற்றும் தொழில் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
எகிப்துக்குத் தேவையான கோதுமை ரஷ்யா, உக்ரைன் நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்தது.
உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதலையடுத்து இரு நாடுகளில் இருந்தும் எகிப்துக்குக் கோதுமை ஏற்றுமதி செய்வது தடைபட்டுள்ளது. அதற்குப் பதிலாக இந்தியாவில் இருந்து கோதுமை இறக்குமதி செய்வது குறித்து எகிப்து பேச்சு நடத்தி வருகிறது.
உலகக் கோதுமை விளைச்சலில் 14 விழுக்காட்டையும், கோதுமை ஏற்றுமதியில் அரை விழுக்காட்டையும் இந்தியா கொண்டுள்ளது.
Comments