கீழே கிடந்த குளிர்பானத்தை குடித்ததாக பாட்டி, பேத்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம்… 3 வயது பேத்தி உயிரிழப்பு

0 2770

கள்ளக்குறிச்சி மாவட்டம் மல்லாபுரத்தில் வீட்டின் முன் கிடந்த குளிர்பானத்தை குடித்ததில் பாட்டி மற்றும் பேத்தி உடல் நலம் பாதித்ததாக கூறப்படும் சம்பவத்தில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 3 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

சத்யராஜ் என்பவரின் தாய் லட்சுமியும், அவரது 3 வயது மகளும் கடந்த வாரம் வீட்டின் முன் கிடந்த பாட்டிலில் இருந்த குளிர்பானத்தை குடித்ததில் உடல் நலம் பாதித்ததாக கூறப்படுகிறது. கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் இருவரும் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக சேலம் மருத்துமனைக்கு சிறுமி அழைத்துச் செல்லப்பட்ட போது வழியிலே  உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

முதாட்டி லட்சுமி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டுள்ளதாகவும், வீட்டின் முன் மர்ம குளிர்பான பாட்டில் எப்படி வந்தது என விசாரித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments