அமெரிக்காவின் காட்டுப் பகுதியில் பற்றி எரியும் நெருப்பால் 45,000 ஏக்கர் புல்வெளிகள் நாசம்
அமெரிக்காவில் ஏற்பட்ட காட்டுத் தீயால் 45 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான புல்வெளிகள் அழிந்தன.
மேற்கு டெக்சாஸில் வெள்ளிக்கிழமையன்று ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் வசித்தவர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இதேபோல் ஈஸ்ட்லேண்ட் கவுண்டியில் இருந்து 18 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டனர்.
பற்றி எரியும் நெருப்பு காரணமாக கார்பன் மற்றும் லேக் லியோன் நகரங்களுக்கு இடையேயான நெடுஞ்சாலையும் மூடப்பட்டது. ரேஞ்சர் நகரில் ஒரு தேவாலயம் மற்றும் சில கட்டிடங்கள் எரிந்து நாசமாயின.
Comments