ஸ்பெயினில் விலைவாசி உயர்வை கண்டித்து ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டம்
ஸ்பெயினில் விலைவாசி உயர்வை கண்டித்து சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள், பிரதமர் Pedro Sanchez உடனடியாக பதவி விலக வேண்டுமென என கோஷமிட்டனர்.
உக்ரைன் மீதான போரால் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், ஸ்பெயினில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.
மேலும் எரிபொருள் விலை உயர்வை கண்டித்து ஸ்பெயின் லாரி ஓட்டுநர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் உணவு உள்ளிட்ட பொருட்கள் விநியோகம் தடைபட்டு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
திடீர் விலைவாசி உயர்வை கண்டித்து மேட்ரிட் உள்ளிட்ட சாலைகளில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Comments