மேற்கத்திய நிறுவனங்களுக்கு திவால் சட்டத்தைப் பயன்படுத்துமா ரஷ்யா?
மேற்கத்திய நாடுகளின் நிறுவனங்கள் ரஷ்யாவுக்கு உற்பத்திகளை நிறுத்தி வைத்து பொருளாதாரத் தடையை அமல்படுத்தியுள்ள நிலையில் ரஷ்ய அரசும் அதன் நிறுவனங்களும் திவால் சட்டத்தைப் பயன்படுத்தி பதிலடி கொடுக்கக் கூடிய சூழல் உருவாகியுள்ளது.
அமெரிக்காவின் திவால் சட்டத்தை விட ரஷ்யாவின் திவால் சட்டம் வேறுபட்டது. கடன் பெற்ற நிறுவனங்களுக்கு புதிய தொடக்கத்தை ஏற்படுத்துவதே அமெரிக்காவின் திவால் சட்டத்தின் இலக்காகும்.
ஆனால் ரஷ்யாவில் கடன் பெற்ற நிறுவனத்தை மூடச் சொல்லி அரசு வற்புறுத்தி அதனை தொழிலிருந்து வெளியேற்றி விட முடியும்.
இச்சட்டத்தின் துணையால் வெளிநாடுகளின் முதலீட்டாளர்கள், கடன் அளித்தவர்கள் மீது ரஷ்யா பதிலடி தர முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
Comments