ரெயில் தண்டவாளத்தில் வீசப்பட்ட ஆண்குழந்தை... காதல் பரிசு கசந்த சோகம்..! தாயிடம் சேர்த்த போலீஸ்

0 3567

சேலம் அருகே தண்டவாளத்தில் அனாதையாக கிடந்த ஆண் குழந்தையை, போலீசார் தாயிடம் சேர்த்துள்ளனர். மும்பையில் மலர்ந்த காதலுக்கு கிடைத்த  பரிசு தண்டவாளத்தில் வீசப்பட்ட பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த பெரமச்சூர் ரெயில்வே கேட் அருகே உள்ள தண்டவாளம் அருகே பிறந்து சில மணி நேரமேயான ஆண்குழந்தை ஒன்று கிடந்தது. குழந்தையின் அழு குரல் கேட்டு அந்த வழியாக சென்றோர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விரைந்து வந்து அந்த குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். குழந்தையை வீசியது யார் என்று விசாரித்த போது மும்பையில் இருந்து நெல்லை செல்லும் தாதர் எக்ட்பிரஸ் ரெயிலில் வந்த இரு பெண்கள் இந்த குழந்தையை அங்கு வைத்திச்சென்றதாக ஒருவர் தெரிவித்தார்.

இதையடுத்து அந்த பகுதியை சுற்றி உள்ள மருத்துவமனைகளில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது தனியார் மருத்துவ மனை ஒன்றில் 22 வயது இளம் பெண் ஒருவர் தொப்புள் கொடி அகற்றும் சிகிச்சைக்காக சேர்ந்திருப்பது தெரியவந்தது.

அவரிடம் நடத்திய விசாரணையில் காதலன் கைவிட்டதால் காதல் பரிசு கசந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அடுத்த சத்திரபடியை சேர்ந்த அந்த பெண் தனது சகோதரியுடன் மகராஷ்டிரா மாநிலம் புனேவில் வசித்து வந்துள்ளார். அங்கு ஒரு இளைஞருடந் மலர்ந்த அத்திமீறிய காதலுக்கு பரிசாக அவர் கர்ப்பமாகி உள்ளார்.

அந்த இளைஞர் கைவிட்டதால் என்ந செய்வது என்று தெரொயாமல் தவித்த அந்த பெண் நிறைமாத கர்ப்பிணியாக சொந்த ஊருக்கு செல்வதற்காக தாதர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறி சகோதரியுடன் பயணித்துள்ளார்.

ஓடும் ரெயிலில் அந்தப்பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட சகோதரியின் உதவியுடன், ரெயில் கழிப்பறையில் வைத்து ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

குழந்தையுடன் ஊருக்கு சென்றால் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாக நேருமே என்று அஞ்சி, சேலம் அடுத்த ஓமலூரில் இறங்கி குழந்தையை தண்டவாளத்தை ஒட்டிய பகுதியில் பையில் வைத்து விட்டு சென்றது தெரியவந்தது.

இதையடுத்து அந்த ஆண்குழந்தையை அந்தப்பெண்ணிடமே ஒப்படைத்த போலீசார் இது போன்ற செயல்கள் சட்டவிரோதமானது என்று எச்சரித்ததோடு, அந்த பெண்ணின் பெற்றோரை வரவழைத்து தாயையும் சேயையும் அவர்களுடன் கூட்டிச்செல்ல அறிவுறுத்தினர்.

காதலிக்கும் போது கட்டுப்பாட்டை மறந்தால் என்ன மாதிரியான நிலை ஏற்படும் என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி.!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments