உக்ரைன் தாக்குதலின் போது ஹைப்பர்சோனிக் வகை அதிநவீன ஏவுகணையை பயன்படுத்தியதாக ரஷ்யா தகவல்

0 1674
உக்ரைன் தாக்குதலின் போது ஹைப்பர்சோனிக் வகை அதிநவீன ஏவுகணையை பயன்படுத்தியதாக ரஷ்யா தகவல்

உக்ரைனில் கின்ஸால் எனப்படும் ஹைப்பர்சோனிக் வகை அதிநவீன ஏவுகணையை தாக்குதலின் போது பயன்படுத்தியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

உக்ரைன் நாட்டின் மேற்குப்பகுதியில் உள்ள இவானோ - பிரான்கிவிஸ்க் பகுதியில் உள்ள ஆயுத சேமிப்புக் கிடங்கை தாக்கி அழிக்க அந்த ஏவுகணையை பயன்படுத்தியதாக ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கின்சால் ஏவுகணை வானில் இருந்து தரைக்கு போர் விமானம் வாயிலாக ஏவப்படும் அதி நவீன ஏவுகணை ஆகும். இது மணிக்கு 4 ஆயிரத்து 900 கிலோமீட்டர் வேகத்திலிருந்து 12 ஆயிரத்து 350 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் என்று கூறப்படுகிறது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments