தமிழகம் முழுவதும் சோதனை - 634 கடைகளில் காலாவதியான குளிர்பானங்கள் விற்பது கண்டுபிடிப்பு

0 1685

பொதுமக்கள் குளிர்பானங்களை கடைகளில் வாங்கும்பொழுது காலாவதி தேதியை சரிபார்த்து வாங்க வேண்டும் என அறிவுறுத்திய உணவுப் பாதுகாப்புத்துறை, அது குறித்து புகாரளிக்க வாட்ஸ் எண்ணை அறிவித்துள்ளது.

பொதுமக்கள் கோடை காலங்களில் அதிகளவில் பருகும் குளிர்பானங்களின் தரம் குறித்து எழுந்த புகார்களின் அடிப்படையில் மாநில முழுவதும் உணவுப் பாதுகாப்புத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

image

அதில், 634 கடைகளில் காலாவதியான குளிர்பானங்கள் கண்டறியப்பட்டதாகவும் ஒன்பது லட்ச ரூபாய் மதிப்புள்ள குளிர்பானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

image

குளிர்பான பாட்டிலில் காலாவதி நாள் உள்ளிட்ட விபரங்கள் தெளிவாக தெரியும் வகையில் அச்சிட அதன் நிறுவனங்களுக்கு உணவுப் பாதுகாப்புத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments