மாதவரம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென தீப்பிடித்த கார்

0 1728

சென்னை மாதவரம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த ரெனால்ட் கார் திடீரென பழுதடைந்து நின்று தீப்பிடித்து எரியத்தொடங்கியதால் காரில் வந்த 4 பேரும் பதறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

வேலூரில் இருந்து கல்லூரி மாணவர்கள் 4 பேர் சென்னை ராயபுரத்தில் உள்ள டிராவல்ஸ் நிறுவனத்தில் இருந்து ரெனால்ட் காரை வாடகைக்கு எடுத்துக் கொண்டு ஆந்திர மாநிலத்தின் தடா பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்தனர். நண்பகலில் அவர்கள் மாதவரம் ரவுண்டானா அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென கார் ஆஃப் ஆகி நின்றுள்ளது.

உடனே சாலையோரமாக காரை தள்ளி நிறுத்தி அதனை ஓட்டி வந்த மெய்ஞானம் என்பவர் முன்பக்கத்தில் இஞ்சின் பகுதியை சோதனை செய்து கொண்டிருந்த போது அதிலிருந்து புகை கிளம்பியுள்ளது.

உடனே உள்ளே இருந்த மூவரும் காரை விட்டு இறங்கிய நிலையில் கார் முழுவதுமாக தீப்பற்றி எரிந்துள்ளது. தகவல் அறிந்து வந்த மாதவரம் போலீசார் மெய்ஞானத்தை பிடித்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், மற்ற 3 மாணவர்களும் அங்கிருந்து தப்பியோடி உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments