தவறான உறவுக்கு இடையூறாக இருந்ததால் மாமனார், மாமியாரை கொலை செய்ய முயன்ற மருமகள் உட்பட 5 பேர் கைது

0 3393

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில், தனது தவறான உறவுக்கு இடையூறாக இருந்த மாமியார், மாமனாரை கொலை செய்ய முயன்ற மருமகள் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

சீனாபுரத்தைச் சேர்ந்த முருகசாமி - அருக்காணி தம்பதி தங்களது மகன் சின்னசாமி, மருமகள் லதாவுடன் வசித்து வருகின்றனர். நேற்று சின்னசாமியும் லதாவும் கோவிலுக்கு சென்ற நேரம் பார்த்து, தண்ணீர் கேட்பது போல வீட்டுக்குள் வந்த 4 மர்ம நபர்கள் முருகசாமியையும் அருக்காணி அம்மாளையும் கட்டையால் தலையில் தாக்கிவிட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது.

இதில் படுகாயமடைந்த இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், வயதான தம்பதியை தாக்கிய கவியரசு, சரவணன், சங்கர், பிரசாந்த் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் விசாரித்ததில், சரவணனின் நண்பரான தமிழரசு என்பவனுக்கும் வயதான தம்பதியினரின் மருமகள் லதாவிற்கும் இடையே தவறான உறவு இருந்ததும் அதற்கு இடையூறாக இருந்ததால் லதா, தமிழரசுவுடன் இணைந்து அவனது நண்பர்கள் மூலம் அவர்களை கொல்ல முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து மருமகள் லதாவை கைது செய்த போலீசார், தலைமறைவான தமிழரசுவை தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments