ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் - இந்தியாவின் லக்சயா சென் அரையிறுதிக்கு முன்னேற்றம்

0 5605

ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்சயா சென் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

இங்கிலாந்தின் பிர்மிங்ஹாம் நகரில் நடைபெற்ற காலிறுதி சுற்று போட்டியில் லக்சயா சென் சீனாவின் லூ குவாங் சூ-வை எதிர்கொண்டார்.

ஆட்டத்தின் பாதியிலேயே காயம் காரணமாக லூ குவாங் சூ வெளியேறியதையடுத்து லக்சயா சென் அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

இதேபோல், மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ட்ரீசா ஜோலி - காயத்ரி கோபிசந்த் ஜோடி காலிறுதியில் தென்கொரியாவின் லீ சோ ஹீ (Lee So-hee)- ஷின் செயூங் சன்(Shin Seung-chan) ஜோடியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments