31ஆம் தேதிக்குள் நகைக்கடன்கள் தள்ளுபடி - அமைச்சர் ஐ.பெரியசாமி

0 3226
31ஆம் தேதிக்குள் நகைக்கடன்கள் தள்ளுபடி - அமைச்சர் ஐ.பெரியசாமி

மார்ச் 31ஆம் தேதிக்குள் தமிழகத்திலுள்ள 14 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான பொது நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.

சென்னை சைதாப்பேட்டையில் பொது நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்ட 165 பயனாளிகளுக்கு நகைகள் மற்றும் அதற்கான சான்று வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, நகைக்கடன் வழங்கப்பட்டது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில், ஏராளமான முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள், பயனாளர்கள் என அனைவர் மீதும் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments