இந்தியாவில் புதிதாக 2,075 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு நேற்றை விட சற்று குறைந்து 2 ஆயிரத்து 75 ஆக பதிவாகி உள்ளது.
24 மணி நேரத்தில் தொற்று பாதித்த 71 பேர் உயிரிழந்த நிலையில், 3 ஆயிரத்து 383 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
நாட்டில் தினசரி பெருந்தொற்று பாதிப்பு விகிதம் பூஜ்ஜியம் புள்ளி 56 சதவீதமாக இருப்பதுடன், நாடு முழுவதும் 27 ஆயிரத்து 802 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.
Comments