தமிழக வேளாண் பட்ஜெட் தாக்கல்... வேளாண்துறைக்கு ரூ.33,007 கோடி ஒதுக்கீடு

0 3272
வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்..

பட்ஜெட்டில் வேளாண்துறையின் பல்வேறு திட்டங்களுக்கு, 33 ஆயிரத்து 7 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதுடன், கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை, பயிர் காப்பீடு போன்ற பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. 

தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார். அதில், கடந்த ஆண்டில் 25 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020-21ஆம் ஆண்டில் ஒன்பது லட்சம் விவசாயிகள் பயிர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் பயன் அடைந்துள்ளதாகவும், வரும் ஆண்டில் அத்திட்டத்திற்கு மாநில அரசின் பங்களிப்பாக, 2 ஆயிரத்து 339 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

தக்காளி விலையை சீராக்க, பருவமில்லா காலங்களிலும் அதன் சாகுபடி ஊக்குவிக்கப்படும் என்றும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக ஏக்கருக்கு எட்டாயிரம் ரூபாய் மானியத்தில், 5 ஆயிரம் ஏக்கரில் இத்திட்டம் 4 கோடி ரூபாயில் செயல்படுத்தப்பட உள்ளது.

மாநில அரசு கரும்புக்கு டன்னுக்கு 195 ரூபாய் ஊக்கத் தொகையாக வழங்கும்.15 கூட்டுறவு, பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் உள்ள ஆய்வுக் கூடங்கள் மூன்று கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீனப்படுத்தப்படும்.

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க 5 ஆயிரத்து 157 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் விளைபொருட்களுக்கு உரிய விலையைப் பெறுவதை உறுதிசெய்யும் வகையில் விவசாயப் பொருட்களுக்கான தொழிற்பேட்டை அமைக்கப்பட உள்ளது.

10 புதிய உழவர் சந்தைகள் 10 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் என்றும் காலையில் காய்கறிகளும் மாலை நேரத்தில் சிறுதானியங்களும் விற்பனை நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உயர் தொழில்நுட்பங்கள் மூலம் வண்ணக் குடைமிளகாய், தக்காளி, வெள்ளரி, கொய்மலர்கள் மற்றும் காய்கறிகள் பயிரிட 25 கோடியே 15 லட்சம் ரூபாய் ஒதுக்கப்படும்.

அயிரை, கெண்டை, கல்பாசு போன்ற உள்நாட்டு மீன்வளர்ப்பு மாற்றும் பாதுகாப்பிற்கு ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கப்படும். விரால், அயிரை உள்பட நாட்டின் மீன் வகைகளை வளர்க்க உள்நாட்டு மீன் வளர்ப்போருக்கு பயிற்சி தரப்பட உள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments