தமிழகத்தின் 2-வது வேளாண் பட்ஜெட் சட்டசபையில் இன்று தாக்கல்.!
தமிழகத்தின் 2-வது வேளாண் பட்ஜெட் சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.
தமிழக சட்ட சபையில் இன்று காலை 10 மணிக்கு வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் விவசாயத்திற்கான தனி நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார்.
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு, விதை மானியம், பாசனக் வாய்க்கால்களை தூர்வார நிதி ஒதுக்கீடு, காவிரி - குண்டாறு இணைப்புக்கு கூடுதல் நிதி உதவி, இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க சலுகைகள் உள்ளிட்ட கவர்ச்சிகர அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டைப் போலவே நடப்பாண்டிலும் வேளாண் பட்ஜெட் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
Comments